மத்திய, மாநில எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு நிறுவனர் எஸ்.கருப்பையா வழிகாட்டல் படிஇராமநாதபுரம் மாவட்ட கிளை, பரமக்குடி வட்டாரப் பொறுப்பாளர்கள் முயற்சியில் முனைவர் சு.பாலு அறக்கட்டளை சார்பில் கொரானா பேரிடர் நிவாரணமாக ஆயிரம் பயனாளிக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு மாவட்டம் முழுவதும் உள்ள கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்
குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி மற்றும் வழிகாட்டுதலின்படி பரமக்குடி வட்டாரம் தினைக்குளம், வசந்தபுரம், பொன்னையாபுரம், எமனேஸ்வரம், கமுதக்குடி, ஊரக்குடி, புதுக்குடி, வினோபா நகர் புலிக்குளம், கண்டாக்குளம், வாலாங்குடி, வேந்தோணி கிராமங்களில் வழங்கப்பட்டது.மத்திய மாநில எஸ்சி., எஸ்டி., அரசு ஊழியர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எஸ் கர்ணன், தலைமை வகித்தார்.மாநில அரசியல் ஆலோசகர் ராஜ்குமார் (ஆயுள் காப்பீடு), மாநில கொள்கை பரப்பு செயலர் மரியம் ஜேம்ஸ் தொடங்கி வைத்தனர்.மாவட்ட செயலர் வி. கே.சேக்கிழார், மாவட்ட பொருளாளர் கே.பாபு தலைமை நிலையச் செயலர் எஸ்.ஆர்.காளிதாசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் சி. தங்கவேலு, நிதிச் செயலர் ஆ.ராமர், ராமநாதபுரம் நகர் செயலர் அழகு குமார், ராமநாதாரம் வட்டார செயலர் சுபாஷ் சந்திரபோஸ், பரமக்குடி வட்டார தலைவர் .பூ.மாதவன் பரமக்குடி வட்டாரச் செயலர் கே.கபில்தேவ், பரமக்குடிவட்டார செய்தி தொடர்பாளர் கே.ஆனந்த், கல்வித்துறை மாவட்டச் செயலர் பாலமுருகன் , கல்வித்துறை பொறுப்பாளர் மோகன்குமார், போகலூர் வட்டாரப் பொறுப்பாளர் சரவணன் ஒருங்கிணைத்தனர்.
மாநிலத்துணைத் தலைவர் வே.பாலசந்திரன் மாவட்ட நிர்வாகிகளை வாழ்த்தினார்.


You must be logged in to post a comment.