இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எருமைக்குளம் வழியாக பொந்தம்புளி, பெருநாழிக்கு போக்குவரத்து உள்ளது. எருமைக்குளம் தெருக்கள் வழியாக இப்பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு, தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. தெருக்களில் குறைந்த வோல்ட் மின் விளக்குகளால், இரவு வேளையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, எருமைக்குளம் ஊராட்சி தலைவர் பெரியசாமி, எருமைக்குளம் சாலை ஓர , தெருக்களில் 4 எண்ணிக்கையில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்கு அமைத்துள்ளார். இதனால் கோயில், தெருக்களில் இருள் நீங்கி, பிரகாசமாக காணப்படுகிறது. அதிக வெளிச்சத்தில் மின் விளக்குகள் அமைத்த, ஊராட்சி தலைவர் பெரியசாமியை எருமைக்குளம் கிராம மக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.


You must be logged in to post a comment.