கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவு இரண்டாவது முறையாக மேலும் இரண்டு வாரங்கள் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை
தொடர்ந்த, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அம்மா உணவகத்தில் பொது மக்கள் இன்று (04.05.2020) முதல் மே 17 ஆம் தேதி வரை மூன்று வேளை உணவு வழங்க அதிமுக திட்டமிட்டது. இதன்படி 14 நாட்களுக்கான உணவு செலவுத் தொகை ரூ.1.20 லட்சத்தை, மாவட்ட அதிமுக., சார்பில் அதிமுக மகளிரணி இணைச்செயலரும் பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவருமான கீர்த்திகா முனியசாமி பரமக்குடி நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமாரிடம் இன்று வழங்கினார்.


You must be logged in to post a comment.