உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான
கே. வீரராகவராவ் ஆலோசனைப்படி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் கிளை சார்பாக இராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மூன்றாம் ஆண்டு செவிலியர் பட்டப்பட்டிப்பு மாணவியர் 56 பேருக்கு துணை முதல்வர் ஆர்.பார்த்திபன் முன்னிலையில்முக கவசம், சானிடைசர், நாப்கின், குளியல் சோப், தேங்காய் எண்ணெய், பற்பசை பாக்கெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தோருக்கு முக கவசம், சானிடைசர், குளியல் சோப் வழங்கப்பட்டது.ரெட் கிராஸ் மாவட்டசேர்மன் எஸ்.ஹாரூன், மாவட் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம், நிர்வாக குழு உறுப்பினர் ஏ. மலைக்கண்ணன், ஜூனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட கன்வீனர் எம்.ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட கன்வீனர் எம்.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.