பரமக்குடி திருநங்கைகளுக்கு ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள்

ராமநாதபுரம் மற்றும் அதன் அருகே பகுதியில் கொரனோ ஊரடங்கு உத்தரவால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு தொடர் சேவையாகஇன்னர் வீல் கிளப் சார்பில் வீட்டு உபயோக மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையில்பரமக்குடி யில் வசிக்கும் திருநங்கைகளுக்கும் சீனி, கொண்ட கடலை, கடலை பருப்பு , உள்ளிட்ட பருப்பு வகைகள், சேமியா சீரகம் ,சோம்பு ,ரவை கோதுமை, உள்ளிட்ட 15 வகையான வீட்டு உபயோகப் மளிகை பொருட்களை பல்வேறு விதமான வீட்டு உபயோக பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது.இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா செந்தில்குமார் ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், ராமநாதபுரம் சமூக நலத்துறையின் சார்பில் மோகனப்பிரியா மற்றும் மங்கையர்க்கரசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் திருப்புல்லாணி, மண்டபம் பகுதியில் உள்ள மீனவ விதவைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள்,ஊனமுற்றேர் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும் வழங்கபட்டது.இதுவரை 250 குடும்பத்தினருக்கு வீடு வீடாக சென்று வழங்கினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!