ராமநாதபுரத்தில் கொரானா பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் ராமநாதபுரம் பாரதி நகரில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரிந்தது. இதன்படி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய இட்லி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


You must be logged in to post a comment.