ராமேஸ்வரத்தில் வீசிய சூறைக்காற்றில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 20 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமாயின.
தமிழகத்தில் விசைப்படகுகளின் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இன்று (29.4.2020) அதிகாலை 4:30 மணியளவில் திடீர் சூறைக்காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 20க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆல்வின் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகு நடுக்கடலில் மூழ்கியது. படகிலிருந்த மீனவர் நால்வர் நீந்தி கரை வந்தனர். சேதமடைந்த படகுகள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல மணி நேரம் மின் தடை நீடித்தது.


You must be logged in to post a comment.