இராமநாதபுரம் மாவட்ட மருந்தகங்களுக்கு கடும் கட்டுபாடு: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., எச்சரிக்கை

கொரானா தொற்று அபாயத்தால் தமிழகமெங்கும் மதுபானக்கடை களை அரசு மூடியுள்ள நிலையில் மதுபோதைக்கு அடிமையான சிலர் போதைக்காக மருந்து கடைகளில் குறைந்தளவு ஆல்கஹால் தன்மை உடைய மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, தொண்டி, கேணிக்கரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்துக்கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்படும் மருந்து சீட்டு கொண்டு வருபவருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி 94899 19722 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். ஒரு சிலர் லாப நோக்கத்தோடு தவறுதலாக மருந்துகளை விற்பனை செய்வது தெரிய வந்தால் மருந்துக் கடையின் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுடன் கடையின் உரிமையை ரத்துசெய்ய பரிந்துரை செய்ய நேரிடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ. வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!