கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 முதல் அமலில் உள்ளது. அத்தியாவசிய பயணத்திற்கு குறிப்பிட்ட நாளில் பயணத்தை
முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் போலி பாஸ் மூலம் சென்னை சென்று இரண்டு கார்களில் திரும்பிய 2 பெண் உள்பட 13 பேர் மீது பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் அருகே போலீசார் இன்று (27.4.2020) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியை கடக்க முயன்ற போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சிவகாசி வட்டார போக்குவரத்து பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி விசாரித்தனர். சென்னையில் இருந்து வந்த அந்த கார் ஓட்டுநர் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர். அந்த காரில் பயணித்த போலீஸ்காரர் உள்ளிட்டோர் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது


You must be logged in to post a comment.