இராமநாதபுரம் பாரதி நகரில் நடந்துவரும் 3 அடுக்கு கட்டட
கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். புழுக்கத்தால், 3 வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு பெய்த மழையை தொடர்ந்து கீழ் தளத்திற்கு இறங்கினர். அப்போது அங்கு தகரத்தால் மூடிப்பட்டிருந்த லிப்ட் பணி குழியில் ஒடிஷா மாநிலம் நூப்படா மாவட்டம் கென்ட் முண்டா பகுதி ஜகஷன் ஹன்ஸா 42 தவறி விழுந்தார். இதில் அவரின் இடது கை துண்டானது. அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது பார்த்திபனூர் அருகே சென்று கொண்டிருந்த போது அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக ஜகஷன் ஹன்ஸா உடல்,
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்டு ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைதுரை பார்வையிட்டு, ஜகஷன் ஹன்ஸா உடன் தங்கி இருந்தோரிடம் விசாரித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஜகஷன் ஹன்ஸா உடலை, கான்ட்ராக்டர் ஏற்பாட்டில் ஒடிஷா கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









