வட மாநிலத்தவர் 182 பேருக்கு ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி நிவாரணம்

குஜராத், பீகார் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த 182 பேர் மார்ச் 25 க்கு முன், ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர். மார்ச் 25 முதல் அமலில் உள்ள தேசிய ஊரடங்கு உத்தரவினால் சொந்த மாநிலம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். எவ்வித முன்னேற்பாடு இன்றி வந்த வட மாநிலத்தவர் 182 பேரும், ராமேஸ்வரம் குஜராத் பவன், சேது ரெசிடன்ஸி, அகஸ்தியர் பவன், ஈஸ்வரன் லாட்ஜ், மிலன் லாட்ஜ், மகேஸ்வரி லாட்ஜ் யூனிட் 1, 2 என மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சார்பில் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!