உச்சிப்புளி அரசு செவிலியருக்கு கொரானா அறிகுறி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கொரானா அறிகுறியால் தாய், மகன் உள்பட 11 பேர் , சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குணமடைந்த இருவர் வீட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், உச்சிப்புளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 27 வயது பெண் செவிலியருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. தொண்டியைச் சேர்ந்த இவர் மாற்று பணி காரணமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்தார். இங்கிருந்து உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், இவருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், கொரானா பரவல் தடுப்ப பணிக்காக, சக பணியாளர்களுடன் ஒரே வாகனத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் கொரானா தொற்று பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் முற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!