இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி, 26. இவர், கீழச்செல்வனூர் கோட்டையேந்தலில்
உள்ள தந்தை வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை கிளம்பினார்.பையில் வைத்து எடுத்து வந்த 10 பவுன் நகை, பள்ளி சான்றுகள், ரூ. 1000 ஆகியன வழியில் தவறி விழுந்து விட்டதாக, சிக்கல் காவல் போலீசில் செல்வி புகார் அளித்தார். இதன்படி சிக்கல் சிறப்பு சார்பு ஆய்வாளார் மலைராஜ் , காவலர் முரளி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வி தவற விட்ட பொருட்கள் அடங்கிய பையை வழியில் கண்டெடுத்ததாக
சிக்கல் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகவேல் மனைவி சந்தனமாரி போலீசில் ஒப்படைத்தார். தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொண்ட செல்வி, சிக்கல் போலீசார் , சந்தனமாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சந்தன மாரியை சிக்கல் போலீசார் பாராட்டினர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









