முதல்வர் பொது நிவாரண நிதிக்கு முன்னாள் அமைச்சர் ரூ. ஒரு லட்சம் நிதி

கொரானா வைரஸ் பரவல் தடுப்பிற்கான முதல்வர் பொது நிவாரண நிதியாக தனது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் ஒரு மாக ஓய்வூதியம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், உச்சிப்புளி எம்ஜிஆர் கல்வி அறக்கட்டளை சார்பில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர் ராஜா வழங்கினார். மேலும் அறக்கட்டளை தலைவர் அ.அன்வர் ராஜா, துணைத்தலைவர்அ.ஜாகிர் உசேன், உறுப்பினர்கள் அ.நாசர் அலி, அ.ராவியத்துல் அதபியா, அ.முகமது கானு ராஜா, அ.ஹலிதா பேகம், அ. சமீரா சுல்தான் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்புக்கூட்டம் நடந்தது. கூட்ட முடிவின்படி கொரானா வைரஸ் தொற்று பாதித்தோரை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களை கொரானா தடுப்பு தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி கடிதத்தை அறக்கட்டளை தலைவரும் முன்னாள் அமைச்சர் , முன்னாள் எம்பி.,யுமான அ. அன்வர் ராஜா , ஆட்சியர் வீரராகவ ராவிடம் இன்று வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!