ஏர்வாடி அரசு மனநல மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெறுவோருக்கு ஆவின் உணவுப் பொருட்கள் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மனநல காப்பகம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்றுவோருக்கு ஆவின் நிறுவன பால் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்வழங்கினார். அவர் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் திரும்பிய 554 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில்.4,583 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வீதம் 2 மாதத்திற்கான உதவித் தொகை தலா ரூ.3,000 வீதம் ரூ.1.37 கோடி சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் மற்றும் மறுவாழ்வு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 191 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை  உணவுப்பொருட்கள், மருத்துவ உதவிகள், ஆவின் பால் உணவுப் பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!