இராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொரானா தடுப்பு வைரஸ் விழிப்புணர்வு

இராமநாதபுரத்தில் கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  கொரானா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மூலம் எடுத்து வருகிறார்.  சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து துறை ஊழியர்களும் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆலோசனை படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ‌ கழக ஊழியர்கள் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து துறைய சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்ட மேலாளர் தமிழ்மாறன், கிளை மேலாளர்கள் பாலமுருகன், தனபால், தெய்வேந்திரன், ரோட்டரி சங்க நிர்வாகி காந்தி உள்பட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!