இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. காங்., கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.எஸ்.விக்டர் முன்னிலை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். வட்டாரத் தலைவர்கள் ஜோதிபாலன் (நயினார்கோவில்), சுப்ரமணிய சேர்வைகாரர் (கடலாடி), சேது பாண்டியன் ( திருப்புல்லாணி – கிழக்கு), கந்தசாமி ( திருப்புல்லாணி – மேற்கு), கோவிந்தன் (கடபாடி கிழக்கு), முனீஸ்வரன் (போகலூர்), கோபால் (ராமநாதபுரம் ) , எம்.ஜி. விஜய ரூபன் (மண்டபம்) மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன், மாவட்ட ஓபிசி அணி தலைவர் கீழக்கரை ரஹ்மத்துல்லா, எஸ்.வி.கணேசன், சேமனூர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் மோதிலால் நேரு , செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளைஞர் காங்., நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர். தையல் இயந்திரங்கள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர் செயலாளர் டிஎம்எஸ் கோபி நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!