ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் பிளஸ் 1 மாணாக்கருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தேவிபட்டினம், திருவாடானை திருப்புல்லாணி பள்ளிகளில் நடந்தது. தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சட்டமன்ற உறுப்பினர் கருணால ஆகியோர் வழங்கினர். விழாவில் பிளஸ் 1 மாணாக்கர் 2,077 பேருக்கு ரூ.88 லட்சம் மதிப்பில் அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









