இராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் அம்மா பூங்கா பகுதியில் 22 ஏக்கரில்
மத்திய, மாநில அரசுகளின் நிதி ரூ.325 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1 காலை நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட இதர அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். விழா முன்னேற்பாடு, முதல்வர் வந்து செல்லும் பாதை, அரசு நலத்திட்ட விவரங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப் குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், சட்ட மன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். அல்லி, சுகாதார நலப்பணிகள் இணை வெங்கடாசலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவ தாசன்,
ராம்கோ கூட்டுறவு சேர்மன் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, தாசில்தார் வி.முருகவேல், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, கட்டுமான பணி மருத்துவ பிரிவுசெயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை, உதவி பொறியாளர் ஜவகர்லால் நேருஜி,பொதுப்பணித்துறை கோட்டப் பொறியாளார் குருதி வேல மாறன், செயற்பொறியாளர் செந்தில்குமார்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









