அடிதடி வழக்கில் பெண்ணின் பெயரை விடுவிக்க, இரண்டாம் தவணையாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும், களவுமாக சிக்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஹேமலதா.இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 20 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணின் விடுவிக்க பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஏற்கனவே ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொண்ட ராஜராஜன், பாக்கி தொகை ரூ.5 ஆயிரத்தை கேட்டு நச்சரித்தார். இதனால் மன உளச்சல் அடைந்த அப்பெண் 94899 19722 என்ற எண்ணில் பயிற்சிக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தல் அப்பெண்ணின் உறவினர் தங்கவேல் என்பவர் , ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் இன்று காலை புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனை படி ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொண்ட தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரன் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!