திமுக., தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், திமுக., நிர்வாகிகள்

கடந்தாண்டு டிச.27 தேதியில் நடந்து முடிந்த ஊரக , உள்ளாட்சி தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு கவுன்சில் தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட்ட மண்டபம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மனைவி சுப்புலட்சுமி , தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அத பியாவை (அதிமுக) , பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த ஒன்றிய பெருந்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரகதாம்பாள் ஜானகி ராமனை வீழ்த்தி சுப்புலட்சுமி ஜீவானந்தம் வென்றார். இதனையடுத்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை , மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் . மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுக., தீர்மானக்குழு இணை செயலாளர் வ.சத்தியமூர்த்தி (முன்னாள் அமைச்சர்), முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.முருகவேல், மண்டபம் பேரூராட்சி பணி நியமனக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.ராஜகோபால், பனைக்குளம் ஊராட்சி திமுக செயலாளர் வக்கீல் ஹலீம் ஆகியோர் உடன் உள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!