இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள்
அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவுக்கு ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் நலனுக்காக 100 சதவீதம் அரசு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,526 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 97 மில்லியன் கனஅடி அளவில் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2018-19 மற்றும் 2019-20 ஆகிய
நிதியாண்டுகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.