இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் ஐம்பெரும் விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, திருக்குறள் விழா, அரவிந்தர் அரங்க ஆண்டுவிழா, இளைஞர் விழா( சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்) மற்றும் நகைச்சுவை நாள் விழா என
ஐம்பெரும் விழா அரவிந்தர் அரங்கில் நடந்தது. இராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் கா.செந்தில்குமார் தலைமை வகித்தார். குழந்தை வளர்ப்பு பற்றியும் மற்றும் மற்றவர்களுக்கு கொடுப்பதே சிறந்தது என்ற தலைப்பில் அவர் உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி புகழ் தேவகோட்டை. மகாராஜன் கலந்துகொண்டு நகைச்சுவை குதிரையில் ஒரு சிந்தனை பயணம் என்ற தலைப்பில் நகைச்சுவை விருந்தளித்தார்.

இளைஞர் எழுச்சி நாயகன் என்ற தலைப்பில் கவிஞர்.வேலுச்சாமிதுரை, ‘அன்னைமொழி அரங்கேறும் அரவிந்த அரங்கம்’ என்ற தலைப்பில் கவிஞர். மாணிக்கவாசகம், மற்றும் ‘மாற்றம் மாறாதது’ என்ற தலைப்பில் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது துணைத் தலைவர். விவேகானந்தன் நன்றி கூறினார். தமிழ்ச் சங்க தலைவர் பேராசிரியர் (ஓய்வு) மை. அப்துல் சலாம், செயலர் டாக்டர் சந்திரசேகரன், ராமநாதபுரம் இன்னர் வீல் சங்க தலைவி கவிதா செந்தில்குமார், டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், புரவலர் தேவிஉலக ராஜ், மங்கள சுந்தரமூர்த்தி, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!