இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019-20ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் அலிம்கோ உதவி உபகரண அளவீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. முதல் மருத்துவ முகாம் 08.8.2019 அன்று,இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 09.08.2019 அன்று சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, 14.08.2019 அன்று திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி, 16.08.2019 அன்று நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, 20.08.2019 அன்று ஆர்.எஸ். மங்கலம் (கிழக்கு) தொடக்கப் பள்ளி, 21.08.2019 அன்று முதுகுளத்தூர் நடுநிலைப் பள்ளி, 22.08.2019 அன்று கமுதி கோட்டை மேடு அரசு மேல்நிலைப் பள்ளி, 27.08.2019 அன்று உச்சிப்புளி தொடக்கப் பள்ளி, 28.08.2019 அன்று தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 29.08.2019 அன்று சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,சாயல்குடி, 30.08.2019 அன்று காட்டு பரமக்குடி ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் அலிம்கோ உதவி உபகரண அளவீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் மாவட்ட மருத்துவத்துறை வாயிலாக மாவட்ட கண், காது மூக்கு தொண்டை, எலும்பு முறிவு. மன நல பிரிவு அரசு டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை,உதவி உபகரண பொருட்களுக்கான பரிந்துரை வழங்க உள்ளனர். அலிம்கோ நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு அளவெடுக்கும் பணி நடைபெற உள்ளது. உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்கள் முகாம்களுக்கு வரும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். காது வால், இதர அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும், மேல் அண்ணப் பிளவு, உதடு பிளவு போன்ற அறுவைச் சிகிச்சை தேவையுள்ள மாணவர்களை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் இலவச அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுவர். மருத்துவ முகாம்களில் அந்தந்த ஒன்றியங்களைச் சார்ந்த மாற்றுத் திறன் குழந்தைகள் பங்கேற்று பயனடைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









