ராமேஸ்வரம் அருகே இளம்பெண்ணிடம் செயின் வழிப்பறி பொதுமக்களிடம் சிக்கிய இருவர் கைது

இராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் மேரி ரெஜினா , 21. சென்னையில் சமூக வலைதள சேனலில் பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இரண்டு தினங்களுக்கு முன் ஊர் வந்தார். இந்நிலையில், இன்று மதியம் ஒரு மணியளவில் மேரி ரெஜினா , தம்பி அகஸ்டினுடன் இரு சக்கர வாகனத்தில் ராமேஸ்வரம் நகருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள், மேரி ரெஜினாவை, கேலி செய்வதும், சில்மிஷம் செய்வதுமாக பின்தொடர்ந்தனர். எம்ஆர்டி நகர் பகுதியில் வந்தபோது மேரி ரெஜினாவை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை வழிப்பறி செய்து கொண்டு தப்பிக்க முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து செயினை வழிப்பறி செய்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த மேரி ரெஜினா, அவரது தம்பி அகஸ்டின் ஆகியோர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பரமாத்மா, விஜயகுமார் எனவும், உரிய பாதுகாப்பின்றி செல்லும் இளம்பெண்களை பின்தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்தது தெரிந்தது. மேரி ரெஜினா புகாரின்படி, வாலிபர் இருவரையும் ராமேஸ்வரம் கோயில் போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!