உயரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமேஸ்வரம் இந்தியன் வங்கி முன் வெங்காயத்தை அடகு வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் இந்தியன் வங்கி முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கழுத்தில் வெங்காய மாலை அணிந்தபடியும்,தட்டில் வெங்காயத்தை எடுத்து வந்தும் வெங்காயத்தை அடகு வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயத்தை அடகு வைக்க வங்கியில் நுழைய முயன்ற கம்யூ., கட்சியினரை போலீசார் தடுத்தனர். இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தியன் வங்கி முன் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை மனுவை, வங்கி மேலாளர் ஏற்றுக் கொண்டதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முருகானந்தம், செந்தில் வேல் கூறும்போது இந்தியாவில் வெங்காய விலை தங்கத்திற்கு நிகராக தற்போது உயர்ந்து வருகிறது . ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தி வருகிறது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வெங்காய விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


You must be logged in to post a comment.