இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சிகள், ராமேஸ்வரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகள் உள்பட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாசல் முன் இருந்த 50 ஆண்டுகளை கடந்த ஆலமரம்
மழையால் வேருடன் இரவு சாய்ந்தது.இதனால் மின் கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.இராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) மா.பிரதீப்குமார், சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன், உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா, வட்டார சுகாதார மேற்பார்வை ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.தீயணைப்பு வீரர்கள், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், என் மனங்கொண்டான் ஊராட்சி பணியாளர்கள் சாய்ந்த ஆல மரத்தை அப்புறப்படுத்தினர்.


You must be logged in to post a comment.