மண்டபத்தில் திடீர் சூறாவளி: நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்தது. இதனையடுத்து விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் பாக் ஜல சந்தி , மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று வீசத் தொடங்கியது. படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்தது. காலை 6:45 மணியளவில் திடீரென சூறாவளி காற்று ஏற்பட்டது. இதில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. சேதமான படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சேத மதிப்புகளை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாரம்பரிய மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் எம்.ஜாகீர் உசேன், எம்.நம்பு வேல், விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செய்யது சுல்தான், அப்துல் ஹனான், எம்.ஜி.விஜயரூபன் ஆகியோர் தெரிவித்தனர். படகுகளின் சேத மதிப்பு குறித்து மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜீத் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!