இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தனர்.இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் பெருமாள் மடை கிராமத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்றின் மூலம் இயங்கும் இரண்டு நீர்த்தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த நீர் தேக்கத் தொட்டி பெருமாள் மடை கிராம மக்கள் மட்டுமல்லாமல் இராஜசிங்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.இந்த நீர்தேக்க தொட்டியை சுற்றியும் அதன் தரைப்பகுதியிலும் பாசம் படர்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவி வந்தது.இதை கேள்விப்பட்ட மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷாஇதனை சரி செய்யும் நோக்கில் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து நீர்த்தேக்க தொட்டியை சரி செய்தனர்.மேலும் அந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு நெகிழியின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுத்தமும் செய்தனர்.


You must be logged in to post a comment.