இராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில். 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ப.மு.முருகேசன் வரவேற்றார்.
463 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை ஆற்றிய சித்தார்கோட்டை மாவட்டத்தில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு பரிசு கேடயத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடமிருந்து வங்கி கிளை மேலாளர் எஸ்.ராஜன் பெற்றுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ரெகுநாதபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பரமக்குடி கூட்டுறவு விற்பனை சங்கம், முதுகுளத்தூர் தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, இராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கி, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், இந்திரா காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், இராமநாதபுரம் கூட்டுறவு கட்டட சங்கம், இராமநாதபுரம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மாவூர் பால் உற்பத்தியாளர் சங்கம், பாம்பன் கயிறு தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கம், கீழக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பொது சேவை மையம் (நகர்புறம்), வண்ணாங்குண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பொது சேவை மையம் (கிராமப்புறம்), சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் ஆர்.புஷ்பவள்ளி (கஞ்சியேந்தல்), அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி விற்பனையாளராக என்.முருகேசன் (திருப்புல்லாணி) ஆகியோருக்கும் பரிசு கேடயம் வழங்கப்பட்டது.ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாநில பனை வெல்லம் கூட்டுறவு சம்மேளன தலைவர் சேதுபாலசிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏ.ஆரிப் ராஜா, கூட்டுறவு சரக துணை பதிவாளர் ரா.லட்சுமணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









