பணி ஓய்வு பணப்பலன்களை வழங்கக்கோரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ராமநாதபுரத்தில்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் சேம நல நிதி, கிராஜூட்டி தொதை 2018 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவில்லை.கடந்த3 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் இன்று (23/7/19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மண்டல பேரவை தலைவர் சிவபிரகாசம் தலைமை வகித்தார்.

மண்டல நிர்வாகிகள் திருநாவுக்கரசு, கோபால் முன்னிலை வகித்தனர். தலைவர் ராமநாதபுரம் கிளை தலைவர் பி.ராஜாராம் பாண்டியன், செயலாளர் ஜி.விஜயபாண்டியன், பொருளாளர் எம்.அன்சாரி, துணை தலைவர் பி.சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!