பள்ளி மாணவ, மாணவியர் இடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்கு விக்கும் வகையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் 1989 ஆம் ஆண்டு முதல், துளிர் வினாடி வினா போட்டி நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இராமேஸ்வரம் வட்டார அளவிலான துளிர் வினாடி வினா போட்டி, இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.தலைமை ஆசிரியர் கே. சந்தான வேலு போட்டியை தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் கே. பாலமுருகன் வரவேற்றார். துளிர் வினாடி வினா போட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். சசிக்குமார் போட்டி நடத்தினார். இப்போட்டியில். இராமேஸ்வரம் தீவு அளவில் இருந்து 15க்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர் கலந்து கொண்டனர்.
ஜூனியர் பிரிவில் 6,7,8 வகுப்பு மாணவர்கள், சீனியர் பிரிவில் 9, 10 மாணவர்கள், 11,12 வகுப்புகள் சூப்பர் சீனியர் பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் என ஒரு பிரிவுக்கு மூன்று பேர் வீதம் கலந்து கொண்டனர். கல்வித்துறையின் 2019-20 காலாண்டு பாடத்திட்டம் படி அறிவியல் பாட புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், துளிர் மாத இதழ் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து ஐந்து சுற்றுகளாக வினாக்கள் கேட்கப்பட்டன.ஜூனியர் பிரிவில் கரையூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சீனியர் பிரிவில் பாம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, சூப்பர் சீனியர் பிரிவில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் முதலிடம் பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடித்த பள்ளி மாணவ,மாணவியருக்கு தலைமை ஆசிரியர் கே. சந்தான வேலு புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடம் பிடித்த மாணவர்கள் அக். 16ல், இராமநாதபுரம் சிஎஸ்ஐ., பி.எட்., கல்லூரியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். தமிழ் நாடு அறிவியல் இயக்க வட்டார துணை செயலாளர் சி. ஜெரோம் நன்றி கூறினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார செயலாளர் மு. சசிக்குமார், துணை செயலாளர் சி. ஜெரோம் செய்து இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











