விஜயதசமியையொட்டி, கொஞ்சும் தமிழ் பேசும் மழலைகளுக்கு அ என்னும் அப்பியாசம் எழுதும் வித்யாரம்பம் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு விஜயதசமியை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் உள்ள 17 அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஜெயந்தி அறிவுறுத்தல்படி,குழந்தை
வளர்ச்சி பணிகள் திட்ட மண்டபம் வட்டார அலுவலர் பாலாம்பிகை, மேற்பார்வையாளர் நாகேஸ்வரி ஆகியோர் வழிகாட்டுதல் படி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. முனைக்காடு, மண்டபம் முகாம் – 1, மண்டபம் முகாம்-2, புதுக்குடியிருப்பு, மைக்குண்டு, காந்தி நகர், ரயில்வே காலனி, நேவி லைன், ஜமீன் சத்திரம் தெரு , வலையர் தெரு, மறவர் தெரு, சேது நகர், டி.நகர், தண்டையல் தெரு, மண்டபம் வடக்கு, முஸ்லிம் தெரு (கிழக்கு), முஸ்லிம் தெரு (மேற்கு) ஆகிய அங்கன்வாடி மைய பகுதிகளைச் சேர்ந்த மழலையர்களை அவர்களின் பெற்றோர் வித்யாரம்ப நிகழ்ச்சி அழைத்து வந்தனர். மையங்களில் அமரவைக்கப்பட்ட மழலையரின் முன் நெல் பரப்பி அதில் ஆள்காட்டி விரல் பிடித்து “அ ” எனும் அப்பியாசம் எழுதி கல்வியை தொடங்கினர். அங்கன்வாடி பணியாளர்கள் ராஜேஸ்வரி, பத்மா தேவி, கிருஷ்ணவேணி, தேவி, விஜயா, மணிமேகலை, மாரீஸ்வரி, கவிதா, தீபலட்சுமி, மல்லிகா, பேபி சரோஜா, ஷாமீலா பானு, சித்ரா தேவி, கவிதா, ஜமுனா, ராதிகா மற்றும் அங்கன்வாடி மைய உதவியாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









