சிறந்த பணி விருது பெற்ற ராமேஸ்வரம் ஜூவி நிருபருக்கு பாராட்டு விழா

விகடன் குழுமத்தின் சிறந்த பணி விருது பெற்ற ஜூனியர் விகடன் வார இதழ் நிருபர் ராமேஸ்வரம் இரா.மோகன்க்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இராமேஸ்வரத்தில் பாராட்டு விழா நடந்தது.இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் இரா.மோகன்.. இவர் பத்திரிகை துறையில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். சமூக பிரச்னைகளை தனது எழுத்து மூலம் ஜூவி வார இதழில் வெளியிட்டு தீர்வு கண்டவர் மோகன். ஜூவி வார இதழில் இவரின் கடந்த 10 ஆண்டு சேவையை கவுரவிக்கும் வகையில், விகடன் குழுமம் சிறந்த பணி விருது வழங்கியது.

சிறந்த பணி விருது பெற்ற மோகனுக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. துணை தலைவர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் பி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார். தலைவர் எஸ்.மிருதுஞ்ஜெயன் வரவேற்றார். கலை இலக்கிய பெருமன்ற பொறுப்பாளர் ந.சேகரன், நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.அர்ச்சுணன், சமூக ஆர்வலர் கராத்தே எம.பழனிச்சாமி, பாஜக., மாவட்ட தலைவர் கே.முரளிதரன், காங்., நகர் தலைவர் எம்.ராஜா மணி, நாம் தமிழர் கட்சி கண்.இளங்கோ, இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அ.அசோகன், பொருளாளர் வி.ஜோதி ராமலிங்கம் உள்பட பலர் பாராட்டி பேசினர். பீக்காக் அகாடமி சார்பில் பரதம், நடனம் நடந்தன. செயலாளர் என்.ஜே.மோகன் தாஸ், பொருளாளர் முகவை முனீஸ், துணை செயலர்கள் எஸ்.காளிதாஸ், ஆர்.கண்ணன், துணை தலைவர் ஏ.ஜேம்ஸ் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!