கிராமசபை விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட  பருத்திக்காட்டு வலசை என்னும் கிராமத்தில்  கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழிப்புணர்வில் பருத்திக்காட்டு வலசை கிராம பொதுமக்களுக்கு கிராம சபை பற்றியும், கிராமசபையின் அவசியத்தை பற்றியும், நமது கிராமங்களுக்கு தேவையானவற்றை எப்படி தீர்மானமாக நிறைவேற்றுவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரும் அக்டோபர்-2 அன்று நடைபெறும் கிராமசபையில் கட்டாயம் கலந்துகொள்வோம் என உறுதியளித்தனர். மேலும் அக்டோபர்-2 கிராம சபைக்கு முன்பு மாதிரி கிராம சபையை முன்னெடுக்க இளைஞர்களிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்ட வளர்ச்சிகள் குறித்தும் , வரவு -செலவு கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பற்றிய  சில தகவல்களும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் யாரும் தங்களுக்கு தேவையான சான்றுகளான இருப்பிடம், வருமானம் போன்ற பல சான்றிதழ்கள் பெறுவதற்கு அரசு  அலுவலகங்களிலும் அரசு அதிகாரிகளுக்கும்  லஞ்சமாக பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!