இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக கடலாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நளினிகாந்த் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இதம்பாடல் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டதில் இதம்பாடல் கிராமத்தில் மிக முக்கிய பிரச்சனைகளை செய்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது .அதில் இதம்பாடல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்ட பட்ட கட்டிடத்தில் சுற்று சுவர் கட்டி தர வேண்டியும் மழைகாலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் சாலைகளில் தேங்கி இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் தண்ணீர் இறங்கி செல்ல வேண்டி நிலை உள்ளது. தண்ணீரில் புழுபூச்சிகள் இருப்பதாலும், வழுக்கி விழுந்தும் செல்வதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி சென்று வருகின்றனர்.அதே போல் தேங்கி இருக்கும் தண்ணீரால் நோய் தொற்று வர வாய்ப்பிறுப்பதாலும் முறையாக பள்ளி வளாகத்தில் சிமெண்ட் தரை அமைத்து தண்ணீர் தேங்காதவாறு தரை அமைத்துக்கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் இதம்பாடல் அய்யா ஊரணியின் குளிக்க பயன்படுத்த படும் படித்துறைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது அதனை சரி செய்யவும் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து தரவேண்டியும் அனைத்து கோரிக்கைகளையும் புகைப்பட ஆதாரத்துடன் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரிக்கும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனித் தனியே கோரிக்கை மனு அளிக்கப் பட்டது இதனை அதன் அதன் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு பரிந்துரைகள் செய்யபட்டது. இராமநாதபுரம் மாவட்ட கடலாடி ஒன்றியம் மக்கள் பாதை சார்பாக ஒருங்கிணைப்பாளர் நனினிகாந்த் கலெக்டர் அலுவலகத்தில் 30-09-2019 இன்று நேரில் மனு அளித்தாா்.








You must be logged in to post a comment.