இராமநாதபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 11 ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை , பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி விண்ணப்பிக்க 11 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மேலும் தற்போது மத்திய அரசு இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பித்திட கீழ்க்கண்டவாறு மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக சிறப்பு முகாம்கள்; நடத்தப்படவுள்ளன.10.10.2019 அன்று பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்,11.10.2019 அன்று நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 15.10.2019 அன்று போகலூர் ஒன்றியத்திலுள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 16.10.2019 அன்று முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 17.10.2019 அன்று கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 18.10.2019 அன்று கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 22.10.2019 அன்று திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்,23.10.2019 அன்று மண்டபம் பேரூராட்சி திருமண மண்டபத்திலும், 24.10.2019 அன்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்,25.10.2019 அன்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. 29.10.2019 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்ää குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்,பாஸ்போட் அளவு புகைப்படம்-, மாற்றுத்திறனாளியின் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!