மாநில அளவிலான காவல் பணி திறன் போட்டி செப்.23 முதல் 27 ஆம் தேதி வரை சென்னையில் நடந்தது. குற்றப் புலனாய்வு, சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பணி திறன் தேர்வுகளில் இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் வி.ராதா மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
கம்ப்யூட்டர் விழிப்புணர்வு போட்டியில் கேணிக்கரை பெண் தலைமை காவலர் எம். ஹேமா (563) மாநில அளவில் இரண்டாம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற காவல் ஆய்வாளர் ராதா, தலைமை காவலர் ஹேமா, பயிற்சி அளித்த சார்பு அலுவலர் சரவணன் ஆகியோரை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாராட்டினர்





You must be logged in to post a comment.