இராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு ) மாவட்டம் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.முஹமது அயூப் கான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.முஹமது பசீர், பொருளாளர் ரஹ்மான் அலி, துணை செயலர்கள் நசுருதீன், ஜஹாங்கீர், மன்சூர், சித்திக் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலர் எம்.தினாஜ் கான் மாநாட்டு தீர்மானங்களை வாசித்தார். மாநில பொதுச் செயலர் இ.முஹமது, துணை பொதுச் செயலர் ஆர்.அப்துல் கரீம், மாநில செயலர் நெல்லை என்.பைசல், பேச்சாளர் கே.எஸ்.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலர் ஜே.எம். ஆரிப் கான் நன்றி கூறினார்.
முஸ்லிம்களின் பறிக்கப்படும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும், அஸ்லாம் மாநிலத்தில் அகதிகள் போல் அந்நியப்படுத்தப்படும் 19 லட்சம் இந்திய முஸ்லிம்களை தேசிய குடியுரிமை பதிவேட்டில் மீண்டும் இடம் பெறச் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சிக்கம், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் தொடரும் சிறப்பு அந்தஸ்து அரசியல் சாசன பிரிவுகள் 370, 35 ஏ ஆகிய சிறப்பு அந்தஸ்துகளை காஷ்மீரில் நீக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது, முத்தலாக் தடை சட்டத்தை நீக்க வேண்டும், மதத்தின் பெயரால் தொடரும் படுகொலைகளை அரசு தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.