இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மேலக் கிடாரம் கிராமத்தில் திருவடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு மற்றும் உய்ய வந்த அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை கிராம பாரம்பரிய முறைப்படி நடந்து வந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டு விழா நடத்த முயன்ற போது தேர்தல் முன் விரோதத்தால் திருவிழாவை கிராம பாரம்பரிய முறைப்படி நடத்த கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி கடந்த 2013ம் ஆண்டு உய்ய வந்த அம்மன் கோயில் முளைப்பாரி திருணை அப்போதைய கடலாடி வட்டாட்சியர் அமிர்தம் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நல்ல மழை பெய்யவில்லை. என மக்களின் உணர்விற்கு ஏற்ப கடந்த செப்.2 ,2019 அன்று கிராமத் தலைவர் அய்யனார் தலைமையில் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி இந்தாண்டு புரவி எடுப்பு மற்றும் முளைப்பாரி திருவிழா கிராம பாரம்பரிய முறைப்படி நேற்று (செப் 29ல்) முதல் அக்.9 வரை நடத்துவது என தீர்மானித்தனர்.பாரம்பரிய முறைப்படி விழா நடத்த கூடாது தடை கோரி சாயல்குடி பச்சைகண்ணு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை கடந்த செப். 25 அன்று நீதிபதி ஜி.கே. இளந்திரியன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது இதில் பச்சைக் கண்ணு மனு நிராகரிக்கப்பட்டு, கிராம மக்களின் தீர்மான அடிப்படை யில் நேற்று (செப் 29) முதல் திருவிழா நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மனுதாரர் மற்றும் குந்தகம் விளைவிப்போர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கடலாடி காவல் ஆய்வாளருக்கு அதிகாரம் அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பூட்டி சீல் வைத்த உய்ய வந்த அம்மன் கோயில் பாரி திருணையை திறந்து விட வேண்டும் என கடலாடி வட்டாட்சியர் பொன். முத்துக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஸிடம் மனு அளித்தனர்.இதன்படி பூட்டி சீல் வைத்த அம்மன் கோயில் திருணை நேற்று முன் தினம் (செப்.28 ) மாலை கடலாடி காவல் ஆய்வாளர், கீழச் செல்வனூர் காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் 500க்கு மேற்பட்ட கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் பொன். முத்துக்குமார் தலைமையில்
கோயில் திருணை திறக்கப்பட்டது கோயில் திறக்க சென்ற வட்டாட்சியர் பொன். முத்துக்குமாருக்கு திடீரென அருள் வந்து மக்கள் முன்னிலையில் சுவாமி ஆடினார். இதை கண்ட கிராம பொதுமக்கள் பக்தி பரவசப்பட்டு அம்மனை வணங்கி வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்


You must be logged in to post a comment.