இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியில் இருந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்ற மண்டபம் முகாம் அகதிகள் இரண்டு பேர் படகுடன் மன்னார் ஊர்மலை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர். இந்நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த லாசர் (38), தனது நாட்டுப்படகு நேற்று (28.9.19) காலை திருடு போனதாக தங்கச்சிமடம் போலீசில் புகார்
கொடுத்துள்ளார்.இலங்கைகடற்படையினரிடம் சிக்கிய இருவரிடம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட உள்நாட்டு போரின் போது 2008 ஆம் ஆண்டு பிரசாந்த் (30), நிஷாந்த் (33) அகதிகளாக தமிழகம் வந்தது தெரிந்தது. இருவர் மீதும் மண்டபம் அகதிகள் முகாமிற்குள் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இருவரும் இலங்கைக்கு முறையான அனுமதியுடன் திரும்பி செல்ல முடியாதது. இதனால் இருவரும் மண்டபம் வட கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகை திருடி இலங்கை சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது தெரியவந்ததுள்ளது.


You must be logged in to post a comment.