இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்

இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , மாவட்ட மிதிவண்டி கழகம் ஆகியன சார்பில் மாணவ, மாணவியருக்கான விரைவு சைக்கிள் போட்டி நடந்தது.அதன் படி, ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் சாலையில் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார். 13 வயதிற்குட்பட்டோர் (10 கி.மீ), 15 வயதிற்குட்பட்டோர் (15 கி.மீ), 17 வயதிற்குட்பட்டோர் (20 கி.மீ) என 3 பிரிவுகளாக மாணவர், மாணவியர் என 200க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் 13 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் இராமநாதபுரம் டிடி விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.விஷால், டி.ஹரி பிரசாத், பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.பாலசேகரன், பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி எம்.கே.தீபதர்ஷினி, ஸ்ரீகுமரன் நடுநிலைப் பள்ளி மாணவி பிரீத்தி ஸ்ரீ, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஐ.ஸ்நோலியா ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர்.

15 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.நவநீதகிருஷ்ணன், இராமநாதபுரம் டிடி விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர் எச்.சந்தோஷ், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஹரீஸ்வர், பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.காயத்ரி, பேராவூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி கே.மவுனிகா, இராமநாதபுரம் யுனைடெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பார்கவி ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பி.சதீஷ், வி.அரவிந்த், பி.முரளி கிருஷ்ணன், பெண்கள் பிரிவில் நுர்ஷத் பர்வீன், எஸ்.யாழினி, சி.சிபெர்யா ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விரைவு மிதிவண்டி கழக தலைவர் பால்பாண்டியன், மாநில துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், ராமநாதபுரம் வட்டாட்சியர் தமிழ்செல்வி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் குமார் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!