ராமநாதபுரத்தில்செப்டம்பர் 22ல் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி.இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது:பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி செப். 22 காலை 7மணியளவில் இராமநாதபுரம் பட்டினம்காத்தான் இசிஆர் சாலை முன்பாக அண்ணா சைக்கிள் போட்டி
நடைபெறவுள்ளது.இப்போட்டியானது 13,15,17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வர வேண்டும். இந்திய தயாரிப்பு மிதிவண்டிகள் மட்டுமே இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழுடன் வந்தடைதல் வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணாக்கர் தங்களது பிறப்பு சான்றிதழ் நகலை தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல், மூன்று இடம் பெறுவோருக்கும் பரிசு வழங்கப்படும். முதல் 10 இடம் பெறுவோருக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









