இராமேஸ்வரத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர் வ.உ.சிதம்பரனாரின் 148 வது பிறந்த நாள் விழா இராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் இளைஞர்கள் நல முன்னேற்றச் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று நடந்தது. இராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் நடந்த விழாவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓவியம், பேச்சு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் குடும்பத்திற்கு தையல் இயந்திரம், கணவரை இழந்து நலிவடைந்த இரு வருக்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது.மீனவர் சங்கப் நிர்வாகிகள் என்.ஜே.போஸ், தேவதாஸ்,பாஜ., மாவட்ட தலைவர் கே.முரளிதரன், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் சலீம்,ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.அர்ச்சுணன், அதிமுக நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுணன், திமுக., நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர் கான், மதிமுக., இளைஞரணி மாநில துணை செயலர் கராத்தே பழனிசாமி, நாம் தமிழர் கட்சி நகர் நிர்வாகி கண்.இளங்கோ, ஏஐடியூசி மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், தமாகா நிர்வாகி முகேஷ் குமார், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் இளைஞர்கள் நல முன்னேற்றச் சங்க த் தலைவர் ஆர்.பி.வினோத்குமார், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஹரிஹரன், ஆலோசகர் பி.ஆர்.ராமநாதன், நிர்வாகிகள் கணேஷ் குமார், சாந்தகுமார், மனோஜ்குமார், பாரதி முத்து, வேடராஜன், சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!