ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செப்.5 ஆசிரியர் தினத்தில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 375 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழக அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் இன்று நடந்த ஆசிரியர் தின விழாவில் புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கணபதி, பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பெரோஸ்கான், திருவரங்கம் திரு இருதயம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் லாசர், முள்ளுவாடி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை உஷா, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியைகள் பீட்டர் ஜோஷ்வா (நாரையூரணி), கங்கா ( லட்சுமிபுரம்), சாந்தா (மாதவனூர்), முகாம்பிகை (கருங்குளம்), ராமநாதபுரம் ஹவுஸிங் போர்டு மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உஷா ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையான் வழங்கி பாராட்டினார் . இவ்விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









