முன்னாள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆ.ப.ஜெ அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள பள்ளி மாணக்கருக்கான இணைய வழி கல்வி மேம்பாட்டு திறனர் போட்டிக்கான சுவரொட்டி வெளியிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் 5-ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் நினைவைப்போற்றும் வகையில் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணாக்கர் பங்கேற்கும் தேசிய அளவிலான இணைய வழி வினாடி வினா மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த நிகழ்விற்கான சுவரொட்டியை (போஸ்டர்) கலாம் அண்ணன், ஆ.ப.ஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை தலைவர் ஹாஜி ஆபஜெ முகமது முத்து மீரா மரைக்காயர் இன்று வெளியிட்டார்.
கீழே கொடுக்கப்படுள்ள இணையவழி இணைப்பு மூலம் இந்த போட்டியில் பங்குபெறலாம்.
https://www.apjabdulkalamfoundation.org/Dr-APJ-Abdul-kalam-5th-Year-Remembrance-Day-National-level-Online-Quiz&Elocution-Competition-2020.php





You must be logged in to post a comment.