ஊரணியில் குளிக்கச் சென்ற காவலாளி நீரில் மூழ்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம் சிவாஜி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் சபரிகிரிநாதன் 25. இவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய உணவு கழகத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர், இந்திய உணவு கழக மேலாளர் ஜானகிராமன் உடன் பட்டணம்காத்தான் சுடுகாட்டு ஊரணியில் இன்று (22/5/2020) காலை குளிக்கச் சென்றார். குளித்துக் கொண்டிருந்தபோது சபரி கிரிநாதன் மாயமானார். ஜானகிராமன் தகவல்படி இராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் சபரி நாதன் உடலை மீட்டனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!