இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமேஸ்வரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டினம் (நவபாஷானம்) மற்றும் மாரியூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. இந்த இடங்களில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் உள்
மாவட்டம், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் மக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதாலும், பொதுமக்கள் நலன் கருதி வரும் 20.7.2020-ம் தேதி ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக இராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், மாரியூர் (சாயல்குடி) மற்றும் பிற கடற்கரையோர இடங்களிலும் சடங்குகள் செய்வதற்கும், மக்கள் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, மேற்படி உத்தரவை மீறி வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண் குமார் எச்சரித்துள்ளார்.


You must be logged in to post a comment.