இராமேஸ்வரத்தை மேம்படுத்துவது தொடர்பான வளர்ச்சி குழு கூட்டம் நடைபெற்றது. வர்த்தக சங்கம், யாத்திரை பணியாளர்கள் சங்கம், அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உட்பட 15க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இராமேஸ்வரத்தில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரீ பெய்டு ஆட்டோ கட்டணம் முறை பரிந்துரை செய்தார். இதன் பின் பிரீ பெய்டு ஆட்டோ கட்டண முறைக்கு வரவேற்பு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் இராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாக அனுமதி இல்லாமல் இயங்கும் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இதன் பின் இராமநாதசுவாமி கோயில் யாத்திரை பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு யாத்திரை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: இராமேஸ்வரத்திற்கு ஆண்டுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருகின்றனர்., இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இராமநாதசுவாமி கோயிலில் உள்ள 425 யாத்திரை பணியார்கள், உணவகங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி சுத்தமான மற்றும் தூய்மையான இராமேஸ்வராமக மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்லி லீமா அமாலினி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, இணை இயக்குநர்கள் சுசீலா (வேளாண்மை), முருகேசன் ( கால்நடை பராமரிப்பு), ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், கோட்டாட்சியர் சுமன், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், தாசில்தார் ஜாபர், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், சுற்றுலா வளர்ச்சி அலுவலர் மருதுபாண்டியன், (கோயில் கட்டுமானம் ) உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனம் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












