இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஐந்து தீர்த்தங்கள் இடமாற்றம்…

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மற்றும் பல நாடுகளில் இருந்து நாளதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் முதலில் நீராடிவிட்டு பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் அமாவாசை மற்றும் இதர முக்கிய நாட்களில் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் கோயில் நிர்வாக முதல் ஆறு தீர்த்தங்ககை பூட்டி விடுகிறது. இதனால் பக்தர்கள் ஒன்றிலிருந்து ஆறு தீர்த்தங்களில் நீராட முடியாமல் மற்ற தீர்த்தங்களில் நீராடிவிட்டு மனவேதனையுடன் திரும்பி செல்லக்கூடிய நிலை உள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமாவாசை மற்றும் கூட்ட நேரங்களில் முதல் ஆறு தீர்த்தங்களில் நீராடும் வகையில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் 30 லட்சம் செலவில் முதல் ஆறு தீர்த்தங்களான மகாலட்சுமி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இரண்டாம் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் புதிதாக தோண்டப்பட்டு இன்று பக்தர்கள் பயன்பாட்டிற் கொண்டு வர இருந்த நிலையில் நேற்று சர்வ கட்சியினர் முதல் தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் மகாலட்சுமி தீர்த்தை தவிர மற்ற ஐந்து தீர்த்தங்கள் மாற்றப்பட்டது.

நேற்று காலை ராமநாதசுவாமி திருக்கோயில்; கணபதி ஹோமத்துடன் தீர்த்தங்கள் மாற்றுவதற்கான பூஜைகள் துவங்கியது.இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜையும் இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது .இதனை தொடர்ந்து தீர்த்த குடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யயப்பட்டு புதிதாக தோண்டப்பட்ட தீர்த்த கிணறுகளில் புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனிவரும் காலங்களில் பக்தர்கள் 22 தீர்த்தங்களில் நீராடுவது வகையில் அமையும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை உயர்நீதி மன்றம் ஆறு தீர்த்தங்களை மாற்ற உத்தரவிட்ட நிலையில் இன்று (28/10/2018) ஜந்து தீர்த்தங்கள் மாற்றப்பட்டது குறிபிடதக்கது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!